Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தக்ஷின் குஜராத் விஜ்-ராஜேஷ் பவர் ரூ1,629 கோடியில் ஒப்பந்தம்

தக்ஷின் குஜராத் விஜ்-ராஜேஷ் பவர் ரூ1,629 கோடியில் ஒப்பந்தம்

நவீன ஸ்காடா தொலைதூரக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பூமிக்கடி கேபிள் அமைப்புகளாக மாற்றும் பணிகளை இந்நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

குஜராத் மாநில அரசு நிறுவனமான 'தக்ஷின் குஜராத் விஜ்' மின் பகிர்மான நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ.1,629 கோடி மதிப்பிலான புதிய மெகா திட்டப் பணியைப் பெற்றுள்ளதாக ராஜேஷ் பவர் சர்வீசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மின் பரிமாற்றம் மற்றும் விநியோகக் கட்டமைப்புத் துறையில் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனமான ராஜேஷ் பவர் சர்வீசஸ், குஜராத் மாநில மின் பகிர்மான நிறுவனமான 'தக்ஷின் குஜராத் விஜ்' நிறுவனத்திடமிருந்து ரூ.1,628.74 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது. இத்திட்டத்தை முழுமையாக வடிவமைத்து, செயல்படுத்தி ஒப்படைக்கும் வகையில் அடுத்த 24 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்துத் தர காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பல்வேறு இடங்களில் பயன்பாட்டில் உள்ள 11 மற்றும் 22 கிலோவோல்ட் அளவிலான மேல்நிலை உயர் அழுத்த மற்றும் குறைந்த அழுத்த மின்கம்பிகள் அகற்றப்படும். அவற்றிற்குப் பதிலாக, நவீன ஸ்காடா தொலைதூரக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பூமிக்கடி கேபிள் அமைப்புகளாக மாற்றும் பணிகளை இந்நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

இப்புதிய ஆர்டர் கிடைத்ததன் மூலம், ராஜேஷ் பவர் நிறுவனத்தின் கையில் உள்ள ஒட்டுமொத்த ஆர்டர் மதிப்பு ரூ.4,000 கோடியிலிருந்து 35 சதவீதம் உயர்ந்து, தற்போது சுமார் ரூ.5,400 கோடியைத் தொட்டுள்ளது. மேலும், இந்நிறுவனம் சமீபத்தில் குஜராத்தின் மற்றொரு அரசு மின் நிறுவனமான 'மத்திய குஜராத் விஜ்' நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.472 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் தன்வசம் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
அனைத்து பொருட்களுக்கும் 8% சதவீத வரி நிர்ணயிக்க கோரிக்கை
அடுத்த செய்தி
பத்திரப் பதிவை எளிதாக்க மாதிரி பதிவு மையங்கள்

தொடர்புடைய செய்திகள்